fbpx

அதிர்ச்சி!. காற்று மாசுப்பாட்டால் ஆண்டுக்கு 33,000 பேர் பலி!. உலக சுகாதார அமைப்பு!

Air pollution: இந்தியாவில் ஆண்டுக்கு மொத்தம் 33,000 பேர், காற்று மாசுவால் இறந்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது. முதல் பத்து இடத்தில் முதலிடத்தில் புதுடில்லி உள்ளது. அடுத்ததாக, பெங்களூரு, ஆமதாபாத், சென்னை, ஹைதராபாத், கோல்கத்தா, மும்பை, புனே, சிம்லா, வாரணாசி ஆகியவை உள்ளன. இதுவரை, இந்த நகரங்களில் ஆண்டுக்கு மொத்தம் 33,000 பேர், காற்று மாசுவால் இறந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவே பெங்களூரில் ஆண்டுக்கு 2,100 பேர் இறக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி நடக்காததால், இந்நகரங்களின் காற்று மாசு, மேலும் மோசமாகும் வாய்ப்பு உள்ளது. பெங்களூரில் காற்று மாசு குறையவில்லை என்றால், வருங்காலத்தில் தற்போது புதுடில்லியில் மக்கள் சந்தித்து வரும் நிலை தான் ஏற்படும்.

காற்று மாசு, ஒலி மாசு, குடிநீர் மாசு போன்றவற்றால் பல நோய்கள் அதிகரித்து வருகின்றன. நகரில் முதலில் பசுமையான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அப்போது தான் நோய்கள் குறையும் என டாக்டர்கள் கூறுகின்றனர். பாபுஜி நகரில் 57, பொம்மனஹள்ளியில் 42, பிரிகேட் சாலையில் 57, பி.டி.எம்., லே – அவுட்டில் 57, சிட்டி ரயில் நிலையத்தில் 66, ஹெப்பாலில் 68, கோரமங்களாவில் 60, ஒயிட்பீல்டில் 57 சதவீதம் காற்று மாசு ஏற்பட்டு உள்ளது.

Readmore: ஆம்ஸ்ட்ராங்கின் கொலை… நேரில் பார்த்த நபர் அதிர்ச்சி தகவல்…!

English Summary

Shock! Air pollution kills 33,000 people every year! World Health Organization!

Kokila

Next Post

EPFO... ரூ.50,000 உடனே உங்கள் வங்கியில் வந்து சேரும்... மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு...!

Mon Jul 8 , 2024
EPFO... Rs.50,000 will reach your bank instantly

You May Like