Trump Rally: டிரம்ப் பேரணியில் நேரடி ஒளிபரப்பின் போது, 26 வயது இளம்பெண் ஒருவர் திடீரென மேலாடையை கழட்டி மார்பகங்களை காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 5 ஆம் தேதி அமரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகினார். இதையடுத்து ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியில் இறங்கினார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை பிரச்சாரங்களில் இணையத்திலும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இவா்கள் இருவருக்கும் இடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. பிரச்சார மேடைகளில் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக சாடி வருகின்றனா்.
அந்தவகையில் கடந்த புதன்கிழமை இரவு நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் உள்ள நசாவ் கொலிசியத்தில் டிரம்ப் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில், கிட்டத்தட்ட 16,000 பேர் பேரணியில் கலந்து கொண்டனர். இதில் அவா லூயிஸ்
என்ற 26 வயது இளம்பெண் கலந்துகொண்டிருந்தார். நிதி திரட்டுவதற்காக அந்த இளம்பெண் பேரணியின் நேரடி ஒளிபரப்பில் டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது, தனது மேலாடையை கழட்டி மார்பகங்களை காட்டியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இளம்பெண்ணை கட்டுப்படுத்த முயற்சித்த போலீசார், அவரை பேரணி நடக்கும் இடத்தைவிட்டு வெளியே அழைத்து சென்றனர். இதையடுத்து, நியூயார்க் டு டப்ளின் போர்ட்டல் மூடப்பட்டது.
Readmore: சூப்பர் வாய்ப்பு…! வேலை இல்லாத நபர்களுக்கு… இன்று காலை 10 மணி முதல்…! மிஸ் பண்ணிடாதீங்க…