fbpx

பேரதிர்ச்சி!. நிலக்கரி சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்!. 300 அடி ஆழத்தில் சிக்கிய தொழிலாளர்கள்!. விடிய விடிய தொடரும் மீட்புப் பணிகள்!.

Coal mine: அசாம் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெள்ள நீர் புகுந்ததால், உள்ளே பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அசாம் மாநிலத்தின் மலை மாவட்டமான உம்ராங்ஷூ பகுதியில் உள்ள டின் கிலோ என்ற இடத்தில் மாநில அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறையால் இயக்கப்படும் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. சுரங்கத்தின் ஒரு பகுதியில் நேற்று 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கத்துக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் இந்த நிலக்கரி சுரங்கத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொழிலாளர்கள் 300 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதாக தெரிகிறது. ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் இறைக்கப்படுகிறது. தொடர்ந்து தீவிர மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. அதே சமயம் தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடிய சுரங்கத்தில் தண்ணீர் சூழ்ந்திருப்பதாகவும், சுமார் 100 அடிக்கு நீர் நிரம்பியுள்ளதால்  மீட்புப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“முதற்கட்ட தகவல்களின்படி, சில தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். ஆனால் சுரங்கத்தின் இடம் தொலைதூரப் பகுதியில் உள்ளதால், எளிதில் அணுக முடியாததால், உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,” என்று டிமா ஹசாவோவின் துணை ஆணையர் சிமந்த குமார் தாஸ் கூறினார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ நிலக்கரிச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர் என்ற துயரச் செய்தி உம்ராங்ஷுவிலிருந்து வந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டிசி, எனது சகா கௌசிக் ராய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் மீட்புப் பணியில் ராணுவத்தின் உதவியைக் கோரியுள்ளோம். மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவையும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளுக்கு உதவுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

Readmore: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா!. திடீர் முடிவிற்கு என்ன காரணம்?. அடுத்து என்ன நடக்கும்?.

English Summary

Shock! Flood entered the coal mine! Workers trapped at a depth of 300 feet! Rescue operations are intense!

Kokila

Next Post

இன்று காலை 10 மணிக்கு... ஆளுநர் RN.ரவியை கண்டித்து தமிழக முழுவதும் இன்று திமுக ஆர்ப்பாட்டம்...!

Tue Jan 7 , 2025
DMK to hold protest across Tamil Nadu today condemning Governor R.N. Ravi

You May Like