fbpx

சென்னையில் அதிர்ச்சி..!! கல்லூரி விடுதியில் கஞ்சா சாக்லெட்.. மாணவி உட்பட 18 பேர் கைது!! – அதிர வைக்கும் பின்னணி

சென்னை பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் மாணவ மாணவிகள் போதை பொருள் பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலில் பேரில் போலீசார் விடுதியில் சோதனை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சென்னை பொத்தேரியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி விடுதியில் போதை பொருள் தொடர்பாக சோதனை செய்யப்பட்டது. விடுதி மாணவிகள் கஞ்சா சாக்லெட் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவிக்கு அவரின் காதலன் கஞ்சா சாக்லெட் கொடுத்துள்ளார். அவர் அதே கல்லூரில் சீனீயர் ஸ்டூடண்ட். போதை பொருள் பயன்படுத்திய மாணவி உட்பட 18 பேரை கைது செய்தோம்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஜாமினில் வெளி வந்தனர். அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த, 3 பேரை கைது செய்துள்ளோம். இவர்களில் டப்லு என்பவர் தாபா-வில் வேலை செய்துகொண்டு கஞ்சா சாக்லெட் விற்பனை செய்து வந்துள்ளார். பெங்களூரை சேர்ந்த கும்பல் கஞ்சா சாக்லெட்டை தயார் செய்வதும், பெங்களூரில் உள்ள மகேஸ் குமார், சுனில் குமார் இருவரிடம் இருந்தும் கஞ்சா சாக்லெட் வாக்கியதாகவும் டப்லு ஒப்புக்கொண்டதாக தெரிவித்தனர். மேலும்.. கஞ்சா சாக்லெட் தயார் செய்யும் பெங்களூரு கும்பலை பிடிக்க போலீசார் தீவீர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்,

Read more ; தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள்.. கூகுளுடன் கைகோர்த்த தமிழக அரசு..!! நெக்ஸ்ட் என்ன?

English Summary

Shock in Chennai..!! Ganja chocolate in college hostel.. 18 people including student arrested!!

Next Post

22 பேருடன் காணாமல் போன ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்து…! 17 பேரின் உடல்கள் மீட்ப்பு..!

Sun Sep 1 , 2024
Russian helicopter crash with 22 people missing...! 17 bodies recovered..!

You May Like