fbpx

கோவையில் அதிர்ச்சி..!! பரோட்டா சாப்பிட்டு தூங்கச் சென்ற கல்லூரி மாணவி திடீர் மரணம்..? நடந்தது என்ன..?

கோவையில் பரோட்டா சாப்பிட்ட இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்த மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் கீர்த்தனா. இவர், இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்றிரவு பரோட்டா சாப்பிட்டு விட்டு வழக்கம்போல தூங்கச் சென்றுள்ளார்.

இன்று காலையில் மாணவி கீர்த்தனாவின் உடல்நிலை மோசமாக இருந்ததைக் கண்ட அவரது பெற்றோர், உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கீர்த்தனாவை கொண்டு சென்றனர். அங்கு கீர்த்தனாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், கீர்த்தனா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், மருத்துவமனைக்கு சென்ற நிலையில், கீர்த்தனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கீர்த்தனா சாப்பிட்ட பரோட்டா எங்கு தயாரிக்கப்பட்டது..? பரோட்டா மாவில் ஏதும் கலப்படம் செய்யப்பட்டதா..? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

Read More : ஃபெஞ்சல் புயல்..!! அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 நிவாரணம்..!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

English Summary

The news that a second-year MBBS medical student died after eating parotta in Coimbatore has caused shock.

Chella

Next Post

பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான விண்ட்ஃபால் வரி ரத்து..!! - மத்திய அரசு

Mon Dec 2 , 2024
Government scraps windfall tax on petrol, diesel, and aviation fuel exports

You May Like