fbpx

ஷாக்!. அச்சுறுத்தும் டெங்கு!. 6,187 பேர் பாதிப்பு!. கடந்தாண்டை விட, 47% பாதிப்பு அதிகரிப்பு!

Dengue: கர்நாடகாவில் இதுவரை 6,187 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மாநில சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் உள்நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தடுப்பது தொடர்பாக, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், பெங்களூரு விதான் சவுதாவில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின், அவர் அளித்த பேட்டியில், பெங்களூரு உட்பட கர்நாடகா முழுதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மழை பெய்வதால் மட்டும் கொசு வருவதில்லை. வீட்டின் அருகில் தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. தற்போதைய சீதோஷ்ண நிலை கூட, கொசு உற்பத்திக்கு காரணமாகிறது.

மாநிலம் முழுதும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும், வீடுதோறும் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூலை 1ம் தேதி வரை 6,187 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே கடந்தாண்டு, 2,903 பாதிப்பு பதிவாகியிருந்தது. கடந்தாண்டை விட, 47 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று கூறினார்.

Readmore: ஜூலை 31-ம் வரை பயிர் காப்பீடு… விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு..!

English Summary

Shock!. Menacing dengue!. 6,187 people affected! 47% increase in impact over last year!

Kokila

Next Post

கவனம்...! TRB இடைநிலை ஆசிரியர் தேர்வு... ஹால் டிக்கெட் வெளியானது...!

Wed Jul 3 , 2024
TRB Intermediate Teacher Exam... Hall Ticket Released

You May Like