fbpx

அதிர்ச்சி..!! கேரளாவில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட அமெரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படும் வெஸ்ட் நைல் வைரஸ், கொசுக்களின் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. குழந்தைகள் உள்பட வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரும் தற்போது நலமாக இருக்கின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து புதிய வழக்குகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று மாவட்ட கண்காணிப்புக் குழுவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவர் மட்டும் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். வெஸ்ட் நைல் நோயின் அறிகுறிகள் காணப்பட்டால், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு சோதனைக்கு அனுப்பப்படுகிறது. வெஸ்ட் நைல் காய்ச்சலானது குலெக்ஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தான நரம்பியல் நோயை ஏற்படுத்தலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. இது முதன்முதலில் 1937இல் உகாண்டாவில் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் முதன்முதலாக கேரளாவில் 2011ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மலப்புரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் 2019ஆம் ஆண்டில் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : பிஃஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.!! உங்களுக்கு இலவசமா ரூ.50,000 வரப்போகுது..!!

Chella

Next Post

உங்கள் துணை உங்களை விட்டு பிரியாமல் இருக்க இதை பண்ணுங்க..!! இது ரொம்ப முக்கியம்..!!

Tue May 7 , 2024
வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க ஆரோக்கியமான மற்றும் நீடித்த உறவு உறுதுணையாக இருக்கும். ஆனால், இது போன்றதொரு உறவை உருவாக்கிக் கொள்ள அதிக கவனமும், அர்ப்பணிப்பு உணர்வும் தேவை. நீண்ட காலம் நீடிக்கும் உறவை அடைவதற்கான வழிகளை இங்கே நாம் பார்க்கலாம். ஆரோக்கியமான எல்லைகள்: உறவில் இருக்கும் இருவரும் தங்களுக்கென சில தனிப்பட்ட எல்லைகள் மற்றும் வரம்புகளை வைத்திருப்பது அந்த உறவை பாதுகாப்பானதாகவும், வசதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. உறவுகளில் ஆரோக்கியமான […]

You May Like