தமிழக அமைச்சரும், பொதுச்செயலாளருமான துரைமுருகன் (86) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல துரைமுருகன் அறிவாலயம் வந்தார். அப்போது, துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
துரைமுருகனுக்கு ரத்த சர்க்கரை அளவு குறைபாடு ஏற்பட்டதால், அவர் மயங்கிய நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் துரைமுருகனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
Read More : ’எம்ஜிஆரை ஆண்மையற்றவர் என பேசியதே திமுக தான்’..!! ’சண்டாளன் என்றால் சமூகமா’..? ’எனக்கு தெரியாது’..!! சீமான் பரபரப்பு பேட்டி..!!