பிப்ரவரி 28ஆம் தேதிக்குப் பிறகு 70 லட்சம் ரேஷன் அட்டைகள் ரத்தாக வாய்ப்புள்ளதாக அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது, சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. ஆனால், இத்திட்டத்தில் தொடர்ந்து பயனடைய வேண்டுமென்றால், சில நிபந்தனைகளை ரேஷன் அட்டைதாரர்கள் கடைபிடிக்க வேண்டும்.
அதாவது, போலி ரேஷன் கார்டுகளை தவிர்க்க மத்திய அரசு e-KYC (Electronic Know Your Customer) முறையை கட்டாயமாக்கியுள்ளது. மோசடி நடவடிக்கைகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை உதவுகிறது. இந்த நடவடிக்கையானது வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதையும், பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் சரியான மக்களுக்கு சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், e-KYC செயல்முறையை முடிக்க மத்திய அரசு 2 வழிகளை வழங்குகிறது. மொபைல் ஒரு முறை கடவுச்சொல் (OTP) அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் இதனை முடிக்கலாம். இதனை மார்ச் 31ஆம் தேதிக்குள் அப்டேட் செய்ய மத்திய அரசு கெடு விதித்துள்ளது. ஆனால், இதுவரை 70 லட்சம் பேர் e-KYC அப்டேட் செய்யவில்லை. அவர்கள் அதை செய்யவில்லை என்றால், ரேஷன் அட்டைகள் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : இனி பொது இடங்களில் இதை செய்தால் ரூ.5,000 அபராதம்…! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு