இந்தியாவில் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் ஏற்படுத்தும் விதத்தில் ராஜாக்களால் கட்டப்பட்ட கோயில்கள் பல இருந்து வருகின்றன. ஆனால் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் குறித்து கேள்வி பட்டு உள்ளீர்களா? ஆச்சரியமாக உள்ளதா? ஆம் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் இந்தியாவில் உள்ளது. இதைக் குறித்து பார்க்கலாம்?
இந்தியாவில் கட்டப்பட்ட ஒவ்வொரு கோயில்களுக்கும் வரலாறு, தனிச்சிறப்பு மற்றும் வித்தியாசமான நம்பிக்கைகள் உள்ளது. அப்படி வித்தியாசமான நம்பிக்கைகளை கொண்ட கோயில் தான் உத்திரபிரதேசத்தில் மீருட் மாவட்டத்தில் தாதியானா கிராமத்தில் அமைத்துள்ள சிவன் கோயில். இந்தக் கோயில் மனிதர்களாலோ அல்லது ஏதோ ஒரு ராஜாக்களாலோ கட்டப்பட்டது அல்ல. பேய்களால் ஒரே இரவில் கட்டப்பட்டுள்ளது என்று இக்கிராம மக்கள் நம்பி வருகின்றனர்.
பாதி நிலையில் கட்டப்பட்டிருக்கும் இக்கோயிலை சிவப்பு கோயில் அல்லது பூதன்வாலா என்றும் அழைத்து வருகின்றனர். இக்கோயில் இரவில் பேய்களால் கட்டி முடிப்பதற்குள் சூரிய உதயம் வந்துவிட்டதால் கோபுரத்தை நிறைவு செய்யாமலேயே அப்படியே சென்று விட்டனராம். பின்பு 1980 ஆம் வருடம் இந்த சிவன் கோயிலில் ஒரு சில விரிசல்கள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கோயிலை சரி செய்துள்ளனர்.
மேலும் எவ்வளவு பெரிய இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் இந்த கோயிலுக்கு எதுவும் ஆகாது. இந்தியாவில் பல பகுதிகளில் மழை வெள்ளத்தாலும், பயிர்கள் வாடி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது போன்ற பல பிரச்சனைகள் நடந்தாலும் இந்த கிராம மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் செழிப்பாகவே வாழ்ந்து வந்தனர். சிவப்பு நிற கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த கோயிலின் பின்னால் இருக்கும் மர்ம கதைகள் குறித்து அங்கு சுற்றி பார்க்கவரும் மக்களும் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.