fbpx

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : இருவர் பலி!

சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம் போல், தொழிலாளர்கள் இன்று (ஜூலை 09) பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். தீயில் கருகி மாரியப்பன், முத்துவேல் ஆகிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

3 பேர் பலத்த காயமுற்று, சிகிச்சைக்காக, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பட்டாசு தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடந்த மாதம் 29ம் தேதி, சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்து 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

English Summary

Shocking news has come out that 2 workers have died in an explosion at Sivakasi Firecracker factory.

Next Post

விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு!! என்ன காரணம்?

Tue Jul 9 , 2024
Bangalore police registered a case against the pub owned by Virat Kohli!! what is the reason?

You May Like