fbpx

அதிர்ச்சி ரிப்போர்ட்: “வேகமெடுக்கு TB”… 2023-ல் இந்த மாநிலத்தில் மட்டும் 108 பேர் இறந்துள்ளனர்….!

இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் கடந்த ஆண்டு மட்டும் மொத்தமாக 108 பேர் காசநோயால் (TB ) பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அம்மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் 17,432 நபர்களின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் 2,272 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பபட்டது. இதில், 164 நோயாளிகள் பல மருந்து எதிர்ப்பு காசநோயால் (MDR-TB) அடையாளம் காணப்பட்டனர். 86% நோயாளிகள் வெற்றிகரமான சிகிச்சையைப் பெற்றாலும், 108 பேர் காசநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

நடப்பு ஆண்டு புள்ளிவிவரங்கள்: நடப்பு ஆண்டின் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், சுகாதார அதிகாரிகள் 3,761 நபர்களின் மாதிரியை பரிசோதித்தில், 595 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 38 பேருக்கு MDR-TB இருப்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் 57 நபர்கள் TB மற்றும் HIV-AIDS இரண்டையும் எதிர்த்துப் போராடுவது கண்டறியப்பட்டது.

யாரெல்லாம் கசனிக்கு பாதிக்கப்படுகிறார்கள்: காசநோயாளிகளில், 6% நீரிழிவு நோயாளிகள், 33% புகையிலை பயன்படுத்துபவர்கள் மற்றும் 16% மது அருந்துபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது: மிசோரம் மாநிலத்தக்தில் இந்த ஆண்டு இதுவரை ஐஸ்வால் மாவட்டத்தில் 433 வழக்குகளும், கோலாசிப் மாவட்டத்தில் 46 வழக்குகளும்,, மற்றும் லுங்லேய் மாவட்டத்தில் 34 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதற்கு நேர்மாறாக, மேற்கு மிசோரமில் உள்ள மாமித் மாவட்டத்தில் ஐந்து வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

Kathir

Next Post

யாரும் வெளியே போகாதீங்க... தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்...!

Thu May 2 , 2024
தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு, கரூர், திருப்புத்தூர் போன்ற பகுதிகளில் வெப்ப அலை […]

You May Like