திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு செவிலியர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் சோதனையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வற்றாப்புத்தூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் சின்னராசு வயது 38. இவர் ஊராட்சி மன்ற செயலாளர் ஆக பணியாற்றி வருகிறார் இவரது மனைவியின் பெயர் சூர்யா வயது 32. இந்த தம்பதியினருக்கு லக்ஷ்மன் என்ற மகன் நான்கு வயதிலும் உதயன் என்ற மகன் ஒரு வயதிலும் இருந்தனர். சின்னராசு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது இதன் காரணமாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது .
இந்நிலையில் சின்னராசு வெளியூர் சென்றதாக கூறப்படும் நிலையில் அவரது மனைவி சூர்யா தனது இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கிணற்றுக்கு போய் இரண்டு மகன்களையும் கிணற்றுக்குள் தள்ளியே கொலை செய்துவிட்டு இவரும் தற்கொலை செய்து இருக்கிறார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த கணவர், மனைவி மற்றும் குழந்தைகளை காணாததால் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு இருக்கிறார். அப்போது செல்போனை யாரும் எடுக்கவில்லை. இந்நிலையில் சிலர் அருகில் உள்ள கிணற்றிலிருந்து செல்போன் சத்தம் வருவதாக தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது சூர்யாவின் செல் போன் கிணற்றுக்கு மேல் இருந்திருக்கிறது . இதனைத் தொடர்ந்து சின்ன ராசு கிணற்றுள் இறங்கி தேடியதில் மனைவி மற்றும் மகனை மீட்டார். இன்னொரு மகனை தீவிரமாக காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை தேடி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.