கென்யாவில் மர்மநோய் பாதிப்பு காரணமாக நடக்கமுடியாமல் பள்ளி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் காகாமெகா (Kakamega) எனும் நகரில் அமைந்துள்ள எரேகி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள், “மர்ம” நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இதனால் நடக்கும்போது சிரமம் மற்றும் முழங்கால் வலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் தாங்கி தாங்கி நடக்கும் வீடியொ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சிறுநீர் மாதிரிகளை சேகரித்து கென்யாவின் மருத்துவ ஆய்வுக் கழகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பள்ளி காலவரம்பின்றி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கென்யா டூம்ஸ்டே கல்ட்டில் மர்ம நோயால் இறப்பு எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 600 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.