fbpx

கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதல்….! சல்லி சல்லியாக வெட்டி வீசப்பட்ட இளைஞர் போலீசார் குவிப்பு….!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்துள்ள தண்டுமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் என்கின்ற மண்டை பிரவீன் (25) வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. சோழவரம் அடுத்துள்ள புதூர் பகுதியில் இருக்கின்ற ஏரியில் பிரவீன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக சோழவரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனை மோதல் காரணமாக, இந்த கொலை நடைபெற்று இருப்பது தெரிய வந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் மேலும் கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

நீ சொல்றதெல்லாம் கேட்க முடியாது இளைஞர் மீது வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு…..! துண்டு துண்டாக சிதறிய உடல்…..!

Fri Jun 23 , 2023
புதுவை முதலியார் பேட்டை அனிதா நகர் சிமெண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான ராஜ்(34) பூமியான் பேட்டையில் இருக்கின்ற இவரது உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்போது தென்னஞ்சாலை பகுதியில் அடக்கம் செய்ய வேண்டும் என ராஜு கடுமையாக வாக்குவாதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வழியாக […]
’எனக்கு போட்டி நீயா’..? ஆத்திரத்தில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய திமுக கவுன்சிலர்..!!

You May Like