fbpx

முடிவெட்டிய போது வெடித்த ஹேர்டிரையர்…  தலை தீப்பிடித்து திகு, திகுவென எரிந்த காட்சிகள் பகீர் ..

வங்கதேசம் காஞ்ச்பூரில் சலூன்கடையில் முடிவெட்டிய போது ஹேர் டிரையர் வெடித்து தீப்பிடித்து எரிந்து தலை மற்றும் கடையில் தீப்பிடித்து திகு திகுவென எரிந்த காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கின்றது.

காஞ்ச்பூரின் நாராயன்காஞ்ச் என்ற பகுதியில் சலூன் கடை உள்ளது. இதன் உரிமையாளர் முடியை வெட்டுவதற்காக அந்த வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டே ஹேர்டிரையரை ஸ்விட்சில் கனெக்ட் செய்கின்றார். பின்னர் அவரை தலை அருகே கொண்டு சென்று ஆன் செய்தவுடன் வெடி சத்தத்துடன் ஹேர்டிரையர் வெடித்தது. அடுத்த நொடியே தலையில் தீப்பிடித்து எரிந்து மள மளவென பரவிய தீ நாற்காலி மற்றும் கடையின் பிற பகுதிகளுக்கும் பரவுகின்றது. இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் முடி வெட்ட வந்த அந்த இளைஞர் கதறலும் நம் மனதை இளக வைத்துள்ளது. ஹேர்டிரையரில் வாயு கசிந்துள்ளது. அப்போது ஏற்பட்ட மன்சார குறுக்கீடு காரணமாக ஹேர்டிரையர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். ‘

இதே போல சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் நடந்த விபத்தில் தீ கட்டிடம் முழுவதும் பரவியதில் 35 வயதான பெண் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

ஜெயம்ரவிக்கு 42-வது பிறந்த நாள் …’’தரமான படங்கள் கொடுப்பதுதான் முக்கியம் ’’ – நடிகர் ஜெயம்ரவி

Sat Sep 10 , 2022
சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு குடும்பத்தினரோடு சிறப்பாக மற்றும் எளிமையாக கொண்டாடினார். 1980 – ம் ஆண்டு பிறந்த ஜெயம்ரவிக்கு இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைகின்றது. மோகனின் மகனும் , இயக்குனர் எம்.ராஜாவின் சகோதரரான ஜெயம் ரவி … ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று வரை வெற்றியடைந்த பல […]

You May Like