fbpx

#House: சொந்த வீடு கட்டுபவர்களே கவனம்… மத்திய அரசு வெளியிட்ட புதிய விதிமுறைகள்…! முழு விவரம் உள்ளே…

இந்திய தேசிய கட்டட விதிமுறைகள் 2016-ஐ பயன்படுத்துவதற்கான வழிகாட்டி மற்றும் மின்சாதனப் பொருட்களை பொருத்துவதில் உள்ள பாதுகாப்புக் குறித்த கையேட்டை தகோயல் வெளியிட்டார்.

இந்திய தரநிர்ணய அமைப்பின் 4-வது நிர்வாக குழுக் கூட்டத்தின் போது இந்திய தேசிய கட்டட விதிமுறைகள் 2016-ஐ பயன்படுத்துவதற்கான வழிகாட்டி மற்றும் மின்சாதனப் பொருட்களை பொருத்துவதில் உள்ள பாதுகாப்புக் குறித்த கையேட்டை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வெளியிட்டார். இந்த முக்கிய இரண்டு ஆவணங்களுடன் சொந்த வீடு கட்டுபவர்கள் அல்லது கட்டடதாரர்களிடமிருந்து வீடு வாங்கியவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வுக்கான மூன்று கையேடுகள் வெளியிடப்பட்டது.

மின் உபகரணங்கள் பொருத்தலின்போது உள்ள பாதுகாப்பு முறைகள் குறித்த கையேட்டை இந்திய தரநிர்ணய ஆணையம் மற்றும் இந்திய சர்வதேச பழுதுபார்ப்போர் சங்கம் ஆகியவை இணைந்து எழுதியுள்ளனர். இந்த கையேடு கட்டடங்களின் வயர் இணைப்பு அளிப்பதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்த ஆவணங்களை கீழ்கண்ட இணையதளங்கள் வாயிலாக காணலாம் https://www.bis.gov.in/index.php/guide-for-homeowners-and-homebuyers/

Vignesh

Next Post

#JustIn : வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர்... மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..

Tue Sep 13 , 2022
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.. கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 3 வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.. தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோவை, சென்னை, திருச்சி என 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது இதே போல் […]

You May Like