fbpx

வாகன ஓட்டிகளே…! வரும் 2025-ம் ஆண்டுக்குள் 50% குறையும்…! மத்திய அரசு அதிரடி…!

சாலை விபத்துக்களை 2025-ஆம் ஆண்டுக்குள் 50% அளவுக்கு குறைக்க அனைவரது முயற்சிகளும் அவசியம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

சாலைப் பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், லாரி ஓட்டுநர்களின் வேலை நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.இந்த நிகழ்ச்சியின் போது, திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாலைப் போக்குவரத்து தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.

ஜனவரி 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நாடு முழுவதும் சாலைப்பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வாரத்தில் நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன என்றார்.

Vignesh

Next Post

அப்படி போடு...! 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இனி மது விற்பனை கிடையாது...! அரசு அதிரடி உத்தரவு...!

Thu Jan 19 , 2023
கர்நாடகாவில் மதுபானம் வாங்குவதற்கான வயது வரம்பை 18 ஆகக் குறைப்பதற்கான வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, முன்மொழியப்பட்ட திருத்தத்தை வாபஸ் பெறவும், 21 வயது வரம்பாகக் கடைப்பிடிக்கவும் முடிவு செய்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பொதுமக்கள், சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை கர்நாடக கலால் துறை மேற்கோளிட்டுள்ளது. கர்நாடக கலால் சட்டம், 1965 இன் பிரிவு 36(1)(ஜி) 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு மதுபானம் விற்பனை […]
மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை மேலும் உயருகிறது..!!

You May Like