fbpx

“கடவுள் ராமருக்கு எலக்ஷனில் சீட் கொடுக்காதது தான் பாக்கி” – பாஜகவின் அரசியலை கடுமையாக சாடிய சிவசேனா எம்பி.!

மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலின் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக நிகழ்வு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாடெங்கிலும் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய புள்ளிகள் சினிமா நட்சத்திரங்கள் சாமியார்கள் மற்றும் மடாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ராமர் கோவில் குறித்து சிவசேனா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூறி இருக்கும் கருத்து அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்த கோவில் கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் இந்தியாவின் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து 1000 கோடி ரூபாய் செலவில் 3 அடுக்குகளை கொண்டு பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலருக்கும் அழைப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் சிவசேனா கட்சியைச் சார்ந்தவர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்களா.? என அந்தக் கட்சியின் எம்பி சஞ்சய் ராவாத்திடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் பாஜக கடவுள் ராமரை வைத்து செய்து வரும் அரசியலை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் “ராமர் கோவில் கும்பாபிஷேக விழா என்பது பாரதிய ஜனதா கட்சியின் கட்சி விழாவாகவே நடைபெற இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி கடவுள் ராமரை தங்களது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ராமரை இன்னும் தங்களது பாராளுமன்ற வேட்பாளராக அறிவிக்கவில்லை. அந்த அளவிற்கு ராமரின் பெயரில் அரசியல் செய்து வருகிறார்கள். நிச்சயமாக எங்களது தலைவர் உத்தவ் தாக்ரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் விழாக்கள் முடிந்த பிறகு தான் அவர் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என தெரிவித்திருக்கிறார்.

Next Post

23 வயது மாடல் அழகி பாலியல் வன்புணர்வு.! சூட்டிங் இருப்பதாக ஏமாற்றி கற்பழித்த இளைஞர்.! போலீஸ் விசாரணை.!

Sat Dec 30 , 2023
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் சூட்டிங் இருப்பதாக ஹோட்டலுக்கு அழைத்து மாடல் அழகி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த 23 வயது மாடல் அழகி சிம்லாவில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருக்கிறார். அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சூட்டிங் […]

You May Like