fbpx

பேரிச்சம் பழத்தில் இவ்வளவு தீமைகள் இருக்கா.? வாங்க என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.!

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், புரதச்சத்து மற்றும் இரும்பு சத்து நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கிறது. இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு உடலின் ரத்தம் அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின்கள், புரதம், இரும்புச்சத்து, சோடியம், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எனினும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல் அதிகமாக பேரீத்தம் பழம் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு வகையான தீமைகள் ஏற்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்தத் தீமைகள் என்ன என்று பார்ப்போம்.

பேரிச்சம் பழம் நார்ச்சத்து கிளை அதிகம் கொண்டது. இவற்றை அளவோடு சாப்பிடும் போது நமது செரிமானத்திற்கும் பயன்படுகிறது. எனினும் இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றில் வீக்கமும் ஏற்படுகிறது. பேரிச்சம் பழத்தில் கார்போஹைட்ரேடுகள் மற்றும் குளுக்கோஸ் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது அவர்களது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க காரணமாகிறது.

பேரிச்சம் பழத்தில் நார் சத்துக்கள் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது என்றாலும் இவற்றில் கலோரி அதிகம். எனவே இவற்றை அதிக அளவில் சாப்பிடும் போது உடல் பருமன் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு கிராம் பேரித்தம் பழத்தில் 2.8 கிராம் கலோரிகள் உள்ளது. பேரித்தம் பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றாலும் இவற்றால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை தவிர்த்துக் கொள்வது நல்லதாகும். குழந்தைகள் அதிகமான பேரிச்சம் பழங்களை சாப்பிடும் போது அவர்களுக்கு வயிற்று கோளாறுகள் மற்றும் சருமத்தில் அரிப்புகள் வரவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Next Post

வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்: குளிர்காலத்தில் முகம் வறட்சியாக இருக்கிறதா.? உங்கள் முகம் பளிச்சிட ஒரு வாழைப்பழம் போதும்.!

Sun Dec 10 , 2023
குளிர்காலத்தில் உங்கள் சருமம் இரண்டு போகும். தெற்கு காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதும் நமது உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாததுமே காரணம். அதிகமாக நீர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க முடியும். எனினும் வறண்ட காற்று நம் முகத்தில் படும்போது முகம் வறட்சி அடைவதை தடுக்க முடியாது. இந்த பாதிப்பை எளிதில் சரி செய்ய வாழைப்பழம் மற்றும் பாதாம் எண்ணையை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம். இதனால் […]

You May Like