fbpx

சிக்கிமில் பனிச்சரிவு: 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்! 1 குழந்தை உட்பட ஆறு பேர் பலி! மீட்பு பணிகள் தீவிரம்!

சிக்கிம் மாநிலத்தில் நாதுல்லா கணவாய் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிக்கி மாநிலத்தின் காங்டாக் மற்றும் நாதுலா பகுதிகளை இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையில் 15 மைல் தொலைவில் இந்தப் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனி சறிவு நிகழ்ந்த போது அங்கு 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதல் கட்டமாக பணிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட ஆறு பேரும் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் 4 ஆண்கள் ஒரு 1 மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது . மேலும் 40 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் படுகாயமடைந்துள்ள அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் 80 பேர் பணிச்சரிவில் சிக்கியிருப்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயரம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் துணை ராணுவத்தினரும் தீயணைப்பு படையினரும் தீவிரமான மீட்பு பணியில் சுற்றுலா பயணிகளை மீட்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குட்டி மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பணிச்சரிவில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Rupa

Next Post

ஏரியிலிருந்து கைகள் கட்டப்பட்டு அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்! காவல்துறை தீவிர விசாரணை!

Tue Apr 4 , 2023
உத்திர பிரதேசம் மாநிலத்தின் மதுராவில் கோவர்தன் பகுதியில் உள்ள ஏரியில் இளம் பெண் ஒருவரின் அரை நிர்வாண உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்தன் பகுதியில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் ஏரியில் […]

You May Like