fbpx

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைக்கு வெள்ளி பதக்கம்..! முதல் போட்டியிலேயே பதக்கம் வென்ற வீராங்கனை..

பிரேசில் நாட்டின் ரியோ டிஜெனீரோவில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை நிஸ்செல் பங்கேற்றார். அபாரமாக தனது திறமையை வெள்ளிப்படுத்திய அவர் 458 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை நிஸ்செல் தனது முதலாவது உலகக் கோப்பை போட்டியிலேயே பதக்கம் வென்று இருப்பதுடன் தகுதி சுற்றில் 592 புள்ளிகள் குவித்ததன் மூலம் சக வீராங்கனை அஞ்சும் மோட்ஜிலின் (591 புள்ளி) தேசிய சாதனையையும் தகர்த்தார்.

மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார். இந்த உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற 16 பேர் கொண்ட இந்திய அணிஒரு தங்கப்பதக்கம் ஒரு வெள்ளி பதக்கம் என பதக்கபட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது இந்தியா.

Kathir

Next Post

நீங்கள் விரும்பி சாப்பிடுவது ஷவர்மா அல்ல..!! இது தெரிஞ்சா இனி சாப்பிட மாட்டீங்க..!! உயிருக்கே ஆபத்து..!!

Wed Sep 20 , 2023
நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஷவர்மாவால் உயிரிழப்பு ஏற்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டு கேரளாவில் கூட இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இளைஞர்கள் விரும்பி சாப்பிடும் ஷவர்மாவில் அப்படி என்ன தான் இருக்கிறது? அது ஏன் ஆபத்தானது? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஷவர்மா என்பது மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த உணவாகும். 19ஆம் நூற்றாண்டில் இது […]

You May Like