Iran attack: இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கிய ஈரான், 200க்கு மேற்பட்ட டிரோன்கள், ஏவுகணைகளை மற்றும் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல் நடந்து வருவதாகவும் ஆனால் உள்வரும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பல இடைமறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பெரும்பாலான ஏவுகணைகள் நீண்ட தூர அரோ வான் பாதுகாப்பு அமைப்பால் இஸ்ரேலுக்கு வெளியே இடைமறிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் கூறினார்.
சில ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கியது. சில சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு IRGC உறுப்பினர்கள் கொல்லப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் வந்துள்ளன.
சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தை குறிவைத்த சியோனிச அமைப்பின் குற்றத்திற்கு பதிலளிக்கும் வகையில் நாங்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஒரு நடவடிக்கையைத் தொடங்கினோம் என்று IRGC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்குவதற்கு டஜன் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஈரானின் இந்த பெரிய அளவிலான தாக்குதலுக்கு முன்னதாக எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் மிக உயர்ந்த அளவில் தயார் நிலையில் உள்ளன என இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் நிற்க உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் முக்கிய தளங்களைச் சுற்றியுள்ள ரஷ்ய தயாரிப்பான Pantsir தரையிலிருந்து வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை இஸ்ரேலிய தாக்குதலின் போது அதிக எச்சரிக்கையுடன் வைத்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.
இதேபோல், நேற்று இஸ்ரேலுக்கு செல்லும் வழியில் ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்கா இராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், பெரிய அளவில் சேதம் என ஈரானும் கூறியுள்ளன. உண்மையில் சேதம் எவ்வளவு என்று தெரியவில்லை.
Readmore: 20 கிலோ வெடிபொருட்களுடன் ஈரான் ட்ரோன்கள்!… 9 மணிநேரத்தில் வெடிக்கும்!… இஸ்ரேல் மீது தொடங்கியது போர்!