புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்தவர் சித்திரகுமார் இவருக்கு ஜீவிதா என்ற மனைவியும், 18 வயதான மணிகண்டன் என்ற மகனும், 16 வயதான பவித்ரா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் மணிகண்டன், ஐடிஐ படித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மகள் பவித்ரா அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகில், தனியாருக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தை பராமரித்து வரும் சித்திரகுமார், அங்கேயே தனது குடும்பத்துடன் தங்கி உள்ளார். 11-ம் வகுப்பு படித்து வரும் இவரது மகள் பவித்ரா இந்தாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ளார். 11-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு, வரும் மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
தேர்வுக்கு இன்னும் ஒரு சில சில நாட்கள் மட்டுமே இருப்பதால், நன்றாக படி என்று சிறுமியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால் எதையும் கண்டுக்கொல்லாத சிறுமி, ரீல்ஸ் பார்ப்பது, தோழிகளுடன் பேசுவது என இருந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். வழக்கம் போல், நேற்று முன்தினம் இரவு சிறுமி படிக்காமல் செல்போன் பார்த்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், ஒழுங்காக படி என்று கூறி மகளை கண்டித்துள்ளனர். மேலும், சிறுமியின் அண்ணன் மணிகண்டன், தனது தங்கையிடம் இருந்து செல்போனை பறித்து வைத்துக்கொண்டு உறங்க செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் அண்ணன் – தங்கை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மிகுந்த கோவம் அடைந்த அண்ணன், இந்த செல்போன் இருந்தால் தானே நீ பார்ப்பாய் என செல்போன் தரையில் போட்டு உடைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, தான் தங்கியிருக்கும் இடத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதனால் பதறிப்போன அண்ணன், தனது தங்கையை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், செய்வது அறியாமல் கூச்சலிட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த பொதுமக்கள், அண்ணன் மற்றும் தங்கையை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் இரவு நேரம் என்பதால் வெளிச்சம் சரியாக இல்லை. இதனால் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மின் விளக்குகளின் உதவியுடன் கிணற்றில் இறங்கியுள்ளனர். நீண்ட நேரத்துக்கு பிறகு அண்ணன் மற்றும் தங்கையை சடலமாக மீட்டனர்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Read more: “இந்த வயசுல நீ எவன் கூட பேசுற” தந்தையுடன் சேர்ந்து 2 மகன்கள் செய்த கொடூரம்!!!