மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் கோட்டையான கேரளாவுக்கு சென்று மாவீரன் படத்தை விளம்பரம் செய்தார் சிவகார்த்திகேயன்.
அப்பொழுது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் நீங்கள் கவுரவத் தோற்றத்தில் வருவதாக பேசப்படுகிறதே. உண்மையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சிவகார்த்திகேயன் ஜெயிலர் படத்தில் நடிக்குமாறு என்னை யாருமே அழைக்கவில்லை என தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். ரஜினியின் தீவிர ரசிகன் சிவகார்த்திகேயன். ஜெயிலர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ரஜினியை சந்தித்து பேசினார், அதனால் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார் என பேச்சு கிளம்பியது.