fbpx

3-வது முறையாக கர்ப்பமான சிவகார்த்திகேயன் மனைவி..!! வைரலாகும் வீடியோ..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் இணைந்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். தனுஷின் 3 படத்தில் காமெடியனாக நடித்தபோது யார் இவர் என்று அனைத்து ரசிகர்களையும் கேட்க வைத்தவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து காமெடி கலாட்டா செய்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னுடைய லெவலே வேற என்னும்படியாக அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்தார்.

தன்னை சிறப்பான காமெடி ஹீரோவாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக வெளிப்படுத்தினார். இந்தப் படங்களின் வெற்றி அவருக்கு அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்கு காரணமாக அமைந்தன. தொடர்ந்து ஹன்சிகா, நயன்தாரா என முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்தார். அடுத்தடுத்து டாக்டர் மற்றும் டான் போன்ற படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். இந்தப் படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியுள்ளன.

தற்போது அமரன் பதில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் குடும்ப உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அந்த வீடியோவில், ஆர்த்தி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இன்னும் சில மாதங்களில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குழந்தை சத்தம் கேட்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அவரது ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடியும், சிவகார்த்திகேயனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

Read More : செம குட் நியூஸ்..!! அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

Actor Sivakarthikeyan attended a family relative’s birthday party with his wife Aarti. In the video, Aarti is revealed to be pregnant

Chella

Next Post

JOB |'இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை..!' 40 ஆயிரம் வரை சம்பளம்! ஒரு டிகிரி போதும்!! உடனே அப்ளை பண்ணுங்க!

Thu May 30 , 2024
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஓர் அங்கமான ஸ்நேகா அறக்கட்டளையில் ஆசிரியர், அலுவலக உதவியாளர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் திருவாரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 31.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  Faculty […]

You May Like