fbpx

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 6 மசோதா நிறைவேற்றம்…!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாவது, “இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடர் 2023-ல் 25 அமர்வுகள் மொத்தமாக நடைபெற்றன. இடைப்பட்ட காலகட்டத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை, பிப்ரவரி 13-ம் தேதி முதல் மார்ச் 12-ம் தேதி வரையில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் மார்ச் 13-ம் தேதி அன்று மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தமாக 25 அமர்வுகள் நடைபெற்றன. இந்த ஆண்டின் முதல் அமர்வில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றினார். அதற்கு பிறகு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் குறித்து இரு அவைகளிலும் பொது விவாதங்கள் நடைபெற்றன. இந்த கூட்டத் தொடரில் 8 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மக்களவையில் 6 மசோதாக்கள் நிறைவேறின. மாநிலங்களவையில் 6 மசோதாக்கள் நிறைவேறின, சில மசோதாக்கள் திரும்ப அனுப்பப்பட்டன. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் 34 சதவீதமும், மாநிலங்களவையில் 24 சதவீதமும் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

Vignesh

Next Post

ஆதார் அட்டையில் இவ்வளவு இருக்கா..? இது சட்டப்படி குற்றம்..!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Fri Apr 7 , 2023
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதாரில் தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் பயோ மெட்ரிக் முறையில் இருக்கிறது. இந்த ஆதார் அட்டை தற்போது அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா பயன்பாடுகளுக்கும் அத்தியாவசியமான ஒரு தேவையாக மாறிவிட்டது. இதனால், இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு ஆவணம் ஆகும். இந்நிலையில் ஆதார் அட்டை […]

You May Like