fbpx

கோவையில் நரபலியா.? குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள்.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பைத் தொட்டியிலிருந்து மனித எலும்பு கூடுகளும் மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கம் பகுதியில் தூய்மை பணியாளர்கள் காமாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள குப்பைத் தொட்டியிலிருக்கும் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் பிளாஸ்டிக் பை ஒன்று கிடந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பிளாஸ்டிக் பையை தூய்மை பணியாளர்கள் பிரித்துப் பார்த்தபோது அதில் மனித மண்டை ஓடுகளும் எலும்பு கூடுகளும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக சிங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பைகளில் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரவியதால் பெருமளவில் மக்கள் திரண்டனர்.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்த காவல்துறை மக்களையும் அங்கிருந்து கலைந்து போகச் செய்தது. மேலும் இந்த மண்டை ஓடுகள் மருத்துவமனையில் இருந்து வீசப்பட்டதா.? அல்லது மாந்திரீக வேலைகளுக்காக சுடுகாட்டில் இருந்து எடுத்துவரப்பட்டதா.? இல்லை நரபலி கொடுக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு துண்டுகள் வீசப்பட்டிருந்தா.?என்ற ரீதியில் காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறது.

Next Post

பிக்பாஸ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜோவிகாவுக்கு இத்தனை லட்சம் சம்பளமா..? கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

Wed Dec 6 , 2023
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு சில பல சர்ச்சைகள், விமர்சனத்தை எதிர்கொண்டு வந்த அவர், எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மகள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத வனிதா கோவாவிற்கு போட்டோ ஷூட் எடுக்க சென்றுவிட்டார். பின்னர் மகளை சந்திக்க ஓடோடி வந்த வனிதா, அவரை ஏர்போர்டில் கட்டியணைத்து பாசத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட […]

You May Like