fbpx

“சாகுற வயசுல உனக்கு இதெல்லாம் தேவையா” ஆடு மேய்த்த சிறுமிக்கு, 70 வயது முதியவர் செய்த காரியம்..

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே உள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் வயது வரம்பின்றி, 1 வயது குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக சிறுவயது குழந்தைகளுக்கு நடக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

அந்த வகையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் சிறுமி ஒருவருக்கு நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள கிராமத்தில், கடந்தாண்டு மே 10-ம் தேதி, 11 வயது சிறுமி ஒருவர் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான சின்ன தம்பி மற்றும் 19 வயதான மதன் குமார் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

சிறுமி தனியாக இருப்பதை பார்த்த இருவரும், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதே கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான மதன் என்ற நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும், அந்த வீடியோவை மற்றவர்களிடம் காண்பித்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தாய், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, அவர் சம்பவம் தொடர்பாக முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. செ.செல்வ நாக ரத்தினம் உத்தரவின் பேரில் சின்னத் தம்பி, மதன் குமார் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Read more: ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த பள்ளி மாணவன்; ஸ்பெஷல் கிளாஸில் ஆசிரியர் செய்த காரியம்..

English Summary

small girl was sexually abused by 2 men

Next Post

இனி தைராய்டு பிரச்சனைக்கு மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை.. இந்த ஒரு கசாயம் குடிச்சா போதும்..

Thu Mar 6 , 2025
best home remedy for thyroid

You May Like