fbpx

இன்று காலை 11 மணி முதல்…! காஞ்சிபுரத்தில் சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி…!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; ஐக்கிய நாடுகள் சபையினால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களாகிய நுகர்வோரிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவுத் திருவிழா நடத்தப்படும் என தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 11.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் சிறுதானிய உணவின் நன்மைகள், பலன்கள் குறித்த விவரங்களுடன் சிறுதானிய உணவுகளை சிறப்பாக தயார் செய்து உரிய குறிப்புகளுடன் பொதுமக்களாகிய நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசுத் துறைகள், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஆகிய அமைப்புகளால் காட்சிப்படுத்தப்படவுள்ளது.மேற்படி அமைப்புகளில் சிறப்பான பங்களிப்பினை வழங்குபவர்களில் முதல் மூன்று இடத்திற்கான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து பரிசுத் தொகையும் மற்றும் நற்சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

இதில் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறித்து தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிகரிக்கும் தற்கொலைகள்!… மோசடி கடன் செயலிகளின் விளம்பரங்களை வெளியிடக்கூடாது!… மத்திய அரசு அதிரடி!

Thu Dec 28 , 2023
ஆன்லைன் லோன் செயலிகளில் கடன் பெற்றவர்களிடையே அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவை சேர்ந்தவர்களால் நடத்தப்படும் மோசடி கடன் செயலிகள் மூலமே அதிகளவில் வட்டி வசூலிப்பது, கடன் பெறுபவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை திருடி அவற்றை ஆபாசமாக சித்தரிப்பது, கைப்பேசியில் உள்ள உறவினர்கள், நண்பர்களின் தொடர்பு எண்களை திருடி, அவர்களிடம் கடன் […]

You May Like