மத்திய நிதியமைச்சகம் ஒவ்வொரு காலாண்டுக்கும் சந்தை நிலவரத்தையும், ஆர்பிஐ வட்டி விகித உயர்வு அடிப்படையிலும் கோடிக் கணக்கான மக்கள் முதலீடு செய்யும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தப்பட்டு உள்ளது. ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 10 – 30 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.10 முதல் 0.30 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் தற்போது 4.0 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் ஜூன் 30 ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் பொதுவாக ஒவ்வொரு காலாண்டில் மத்திய அரசால் மதிப்பாய்வு செய்யப்பட்டு புதிய வட்டி விகிதத்தை அறிவிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளது. முந்தைய காலாண்டிற்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்களை அறிவிக்கும் போது, பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கு 70 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.70 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிகரித்து. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), கிசான் விகாஸ் பத்ரா (KVP) மற்றும் சுகன்யா சம்ரிதி திட்டம் போன்ற திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாறாமல் வைக்கப்பட்டுள்ளன. இதோடு மீண்டும் மத்திய அரசு பிபிஎப் முதலீட்டு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாறாமல் வைத்துள்ளது வருத்தம்.
மத்திய அரசு பிபிஎப் திட்டங்களுக்கு கடைசியாக ஏப்ரல்-ஜூன் 2020 இல் மாற்றப்பட்டது. இப்போது பிபிஎப் திட்டம் மீதான வட்டி விகிதம் 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள வட்டி உயர்வு மூலம் எந்த திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என்றால் தபால் நிலைய RD (Recurring Deposit) மீதான வட்டி விகிதம் 6.2% இருந்து 6.5% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் தபால் நிலைய 1 வருடம் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதம் 6.8% இருந்து 6.9% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. 2 வருடம் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதம் 6.9% இருந்து 7.0% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.