Anganwadi lunch: மகாராஷ்டிராவில் அங்கன்வாடியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இறந்து கிடந்ததை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மஹாராஷ்டிராவின் மேற்குப் பகுதியில் உள்ள சாங்லி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக பேக் செய்யப்பட்ட மதிய உணவுப் பொட்டலத்தில் சிறிய செத்த பாம்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இதையடுத்து, சாங்கிலி ஜில்லா பரிஷத்தின் துணை தலைமை செயல் அதிகாரி சந்தீப் யாதவ் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கமிட்டி அங்கன்வாடிக்கு சென்று ஆய்வக சோதனைக்காக பாக்கெட் எடுத்து செல்லப்பட்டது.
கடந்த மாதம் இதேபோன்ற ஒரு சம்பவம் பீகாரில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது, பங்கா மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி ஒன்றில் செத்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல், கடந்த மாதம் நொய்டாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்க்ரீமில் மனித விரலைக் கண்டெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Readmore: எல்பிஜி சிலிண்டர்களுக்கு விரைவில் QR குறியீடு!. பியூஷ் கோயல் அறிவிப்பு!