கடந்த சில நாட்களுக்கு முன் கோவை புலியகுளம் பகுதியில் 8 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான அப்துல் ரஹ்மான் மற்றும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா ஆகியோர் சென்று பாம்பை பிடித்தனர். இதனை கோவை வனச்சரக அலுவலர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
சாரை பாம்பை பிடித்தபோது, சாரை பாம்புகள் விஷமற்றவை. அவற்றால் மனிதர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்ற விழிப்புணர்வு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில், அது வைரலானது. இந்நிலையில், பாம்பை மீட்ட அப்துல் ரஹ்மான், உமா மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதியின்றி பிடித்து செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தினர்.
விசாரணைக்கு பின்னர் 20,000-க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடித்த தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினரான இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து கோவை மாவட்ட வனப்பாதுகாவலரிடம் கேட்டபோது இதுபோன்று மற்றவர்கள் ஈடுபட கூடாது எனவும் நல்லெண்ண அடிப்படையில் இருவரும் செயல்பட்டதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Read More : ’ஐய்யோ என்ன விட்ருங்க’..!! 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பெரியப்பா மகன்..!! மேலும் இருவர் கூட்டு..!!