கோலிவுட் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்று பெயர் எடுத்தவர் தான் நடிகை சினேகா. இவருடைய நடிப்பில் வெளியாகின்ற அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுப்பார்கள்.
திருமணத்திற்கு பின் சினேகா நிறைய படங்களில் நடிக்கவில்லை. இறுதியாக சினேகாவின் நடிப்பில் பட்டாஸ் திரைப்படம் வெளியாகியது. சமீப காலமாகவே நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா திருமண வாழ்க்கை பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன.
சினேகாவும் ,பிரசன்னாவும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நடிகை சினேகா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சினேகா பகிர்ந்த நிலையில் அவர் கணவருடன் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை நன்றாகத் தான் இருக்கிறார்கள் என்று உணர்த்தியுள்ளார். சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. அது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மிகவும் மன உளைச்சலை கொடுக்கிறது. எனவே நெட்டிசன்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.