fbpx

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இத்தனை நாட்கள் கோடை விடுமுறையா?

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கும் நிலையில், கொளுத்தி வரும் வெயிலின் தாக்கம் மற்றும் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவை இருப்பதால் மேலும் ஒரு வாரம் விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வழக்கமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை மே மாதம் 1 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை விடப்படும். இந்த ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விடுமுறை இல்லா தினங்களில் பள்ளிக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணி மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே வரும் நான்காம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால் அந்த பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஜீன் நான்காம் தேதி வரை விடுமுறை என்பது உறுதியாகியுள்ளது. அதேவேளையில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வருவதால் ஜூன் 2 வது வாரம் வரை பள்ளிகளுக்கான கோடை விடுறை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Post

"அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில் முந்தைய அரசு கவனம் செலுத்தவில்லை!"- பிரதமர் மோடி குற்றசாட்டு

Sun Apr 21 , 2024
பிரதமர் மோடி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், வடக்கில் இருந்து தெற்கு வரையிலான மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு, ஆளுநர் அதிகாரம், நிதிப்பங்கீடு, தென் மாநிலங்களில் பாஜகவுக்கு அதிகரித்து இருக்கும் செல்வாக்கு ஆகியவை குறித்து விவரித்துள்ளார். அந்த நேர்காணலில் அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில் முந்தைய அரசு கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “மேற்கு ஆசியாவுடனான நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முந்தைய […]

You May Like