பள்ளி ஆசிரியை தான் பணியாற்றிய பள்ளியில் பயின்ற மாணவியை திருமணம் செய்து கொள்வதற்காகவே ஆறுவை சிகிச்சை மூலம் பாலினத்தை மாற்றிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான்மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீரா. இவர் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். அப்போது கல்பனா என்ற மாணவி பள்ளியில்சேர்ந்தார். மீராவுக்கு கல்பனாவுடன் பழிகியதும் காதல் ஏற்பட்டது. இதனால் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகமானது. எனவே தன் பாலினத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தன் பாலினத்தை மாற்றிக் கொண்டு மீராவாக உள்ளே சென்றவர் வெளியே வரும்போது ஆரவ் குண்டலாக வெளியே வந்தார்.
கல்பனாவுக்கும் காதல் ஏற்பட்டது. இது குறித்து ஆரவ் கூறுகையில், ’’ தனது பாலினத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள நினைத்தேன். 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இரணடு வருடம் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டேன். செயல்முறை முடிந்தது . இரண்டு வீட்டு சம்மதமும் பெற்றேன். பின்னர் கல்பனாவை திருமணம் செய்து கொண்டதாக மீராவாக பிறந்து வளர்ந்து ஆரவாக மாறிய நபர் தெரிவித்துள்ளார்.
ஆரவுக்கு 4 மூத்த சகோதரிகள் இருக்கின்றனர். சகோதரர்கள் இல்லை. அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் பெண்ணாக இருந்தபோது எனக்குள் ஒரு உணர்வு வந்தது நான் பெண் அல்ல ஆண் என்று தோன்றியது. அதன் பின்னர் ஆணாக மாறிவிட்டேன். ஆனால், பெண்ணில் இருந்து ஆணாக மாறுவதில் சிக்கல்கள் உள்ளது. ஆவணங்கள் தொடர்பான சிக்கலில் உள்ளேன். என தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆரவ் தந்தை பிரி சிங் கூறுகையில், எனக்கு 5 பெண் குழந்தைகள் இருந்தனர். மகன் இல்லை. இளையவளான மீரா பெண்ணாக இருந்தாலும் ஆண் போல் வளர்ந்தாள். அவளின்செயல்களும் ஆணை போலவே இருக்கும். ஆரவ் மகிழ்ச்சியாக இருப்பதும் அவன் திருமணமாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.