பொதுவாக பட்டியலினத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை, மற்ற உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில், புறக்கணிப்பது வழக்கமான ஒன்றுதான்.
அப்படி ஒரு சம்பவம் 2 வருடங்களுக்கு முன்னர், தமிழகத்தில் நடைபெற்றது. அதாவது, கோவில் அன்னதானம் வழங்கப்பட்ட போது, நரிக்குறவர் பெண்ணான அஸ்வினி, அந்த கோவில் அன்னதானத்தில் தன்னுடைய சமூக நபர்களுடன் சாப்பிட முயற்சி செய்தார். ஆனால், அப்போது கோவில் நிர்வாகிகள், இவர் நரிக்குறவ இனத்தைச் சார்ந்தவர் என்பதற்காக, கோவிலுக்குள் விடவில்லை என்று கூறப்பட்டது.
உடனடியாக ஆவேசப்பட்ட அஸ்வினி, தான் அவமதிக்கப்பட்டதாக ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த கோவிலுக்கு சென்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அந்த நரிக்குறவர் பெண்ணுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்.
இந்த நிலையில், சென்ற வருடம் தீபாவளி தினத்தன்று, அந்த நரிக்குறவர்கள் வசிக்கும் செங்கல்பட்டு மாவட்டம்,பூஞ்சேரி பகுதிக்கு சென்று, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதன் பிறகு, அஸ்வினியின் வீட்டிற்கும் சென்று, அவரை நலம் விசாரித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் முதலமைச்சர்.
அதன் பின் ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வரே, சாதாரண பெண்ணான நம்முடைய வீட்டிற்கு வந்து சென்று விட்டார், என்ற கர்வம், அஸ்வினியின் மனதில் மெல்ல, மெல்ல ஏழத் தொடங்கியது. அதற்குப் பிறகு, அஸ்வினியின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும், அஸ்வினி அக்கம்பக்கத்தில், இருக்கின்ற கடைகளுக்கு சென்று, அங்கே உணவு சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் வந்து விடுவாராம். அவரிடம் பணம் கேட்டால், நான் யார் தெரியுமா? முதல்வரே என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார். என மிரட்டல் தொனியில் பேசுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், காவல்துறையினருக்கும், அஸ்வினியின் மீது பல புகார்கள் சென்றுள்ளது. ஆகவே, காவல்துறையினர் தரப்பில், அஸ்வினியை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தான், மாமல்லபுரம் பகுதியில், ஊசிமணி, பாசிமணி போன்றவற்றை விற்பனை செய்யும், நந்தினி என்ற பெண்ணுடன், அஸ்வினி தகராறு செய்திருக்கிறார். இந்த இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு அதிகரித்து, அஸ்வினி, தன்னுடைய கைகளில் வைத்திருந்த, கத்தியை எடுத்து, நந்தினியின் கையை கிழித்ததாக சொல்லப்படுகிறது.
ஆகவே, நந்தினி வழங்கிய புகாரின்படி, அஸ்வினியை மாமல்லபுரம் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள். அதோடு, கொலை முயற்சி வழக்கின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனாலும், முதலமைச்சர் தன்னுடைய வீட்டிற்கு வந்து, சென்றதால், நான் பிரபலமாகி விட்டேன் என்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான், தன் மீது பழி சுமத்துகிறார்கள் என்று அஸ்வினி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.