fbpx

மகிழ்ச்சி…! சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்…! முதல்வர் அதிரடி வாக்குறுதி…

தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2016-இல் இருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி 119 தொகுதிகளுக்கு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்ரீய சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் என்று சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்துள்ளார்.

தெலுங்கானா ராஷ்ரீய சமிதி சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமாக; வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படும். சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2016-இல் இருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே ரூ.3016ஆக உயர்த்தப்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4016-லிருந்து ரூ.6016 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தகுதியானவர்களுக்கு 400 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு செய்து கொடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும்...? வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை...!

Mon Oct 16 , 2023
தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like