இன்று மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனையில் மிக முக்கியமானதாக இருப்பது மன அழுத்தம். அதிகமான வேலைப்பளு சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது உறவுமுறை சிக்கல்கள் ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலான மனிதர்கள் மன அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் மன அழுத்தம் பிரச்சனை வெறும் பிரச்சினையாக உருவெடுத்தது. தற்போதும் இதில் பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட்டு இனிமையான வாழ்வை வாழ பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காண்போம்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட பெரும்பாலானவர்கள் வலியுறுத்துவது யோகா பயிற்சி. இந்தப் பயிற்சி மனதை அமைதிப்படுத்துவதோடு ஒருநிலைப் படுத்துகிறது. இதன் காரணமாக மன குழப்பம் தீர்ந்து மன அழுத்தம் பிரச்சனை கட்டுப்படுத்தப்படுகிறது. மன அழுத்தத்தில் இருந்து நேர்மறை சிந்தனை உடன் இருப்பது அவசியமாகும். எப்போதும் எதிர்மறையாகவே சிந்தித்துக் கொண்டிருந்தாள் மன அழுத்தம் மேலும் அதிகப்படும். எனவே நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதோடு அவற்றைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்.
நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மனம் விட்டு பேசுவது மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றொரு சிறந்த வழி. மன அழுத்தத்திற்கு மனநிலையின் இறுக்கமும் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே நமது நெருங்கிய நண்பர்கள் அல்லது துணையிடம் மனம் விட்டு பேசுவதும் மன அழுத்தத்தை குறைக்க ஒரு சிறந்த வழி. இசை கேட்பதும் மன அழுத்தத்தை போக்குவதற்கு சிறந்த வழியாகும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இசைத்தெரபி சிகிச்சையும் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மனதை அமைதிப்படுத்தும் இசையை கேட்பதன் மூலமும் மன அழுத்தத்தை குறைக்கலாம்.