fbpx

தகராறில் மருமகனே மாமியாரை கொன்ற பரபரப்பு..!

வலப்பனை என்ற பிரதேசத்தில் இன்று மாலை நேரத்தில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் முக்குனகாபிட்டிய கலங்கவத்தின் பகுதியில் வறுமையை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது. 

அந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகள், மருமகன், மாமியார் என மூவரும் வந்திருக்கிறார்கள். இதனிடையே மருமகன் மற்றும் மாமியார் இருவருடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய் வார்த்தையாக இருந்த தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த மருமகன் அப்போது தான் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தி ஒன்றை எடுத்த 27 வயதான மருமகன்  59 வயதுடைய (ரணசிங்க) மாமியாரை பலமாக தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மாமியார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சில காயங்களுடன் மனைவியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் மருமகனை கைது செய்துள்ளனர்.

Rupa

Next Post

#திருப்பத்தூர்: கணவன் மாலையை கழற்றியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம்..!

Wed Nov 23 , 2022
திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் ரமேஷ் (36). ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் தனது மனைவி கவிதா மற்றும் 2 பிள்ளைகளுடன் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு மாலையிட்டு பாத யாத்திரை சென்று வந்திருக்கிறார்.  இதனை தொடர்ந்து ,இந்த ஆண்டும் சில நாட்களுக்கு முன்னர் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலைக்கு மாலை போட்டுள்ளார். இந்த நிலையில் சில காரணங்களால் அவர் மாலையை கழற்றியுள்ளார். இது […]

You May Like