fbpx

சகோதரியைப் பற்றி தவறாக பேசிய தந்தை……! கிரிக்கெட் பேட்டால் தலையில் அடித்த மகன் தந்தை பரிதாப பலி…..!

சென்னை கிண்டி இக்காட்டுத்தாங்கல் சண்முகராஜா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (55) இவருக்கு சுபலட்சுமி (48) என்ற மனைவியும் சுமித்ரா (28) என்ற மகளும், ஜபரீஷ்( 23) என்ற மகனும் இருக்கின்றனர்.

சொத்து பிரச்சனை என் காரணமாக குடும்பத்திற்கு உள்ள அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் பாலசுப்பிரமணி வீட்டில் அனுமதிக்காமல் இருந்ததாக தெரிகிறது. அதன்காரணமாக, குடி போதைக்கு அடிமையான அவர் நாள்தோறும் குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதோடு சென்ற ஒரு வருட காலமாக குடும்பத்திலிருந்து பிரிந்து பாலசுப்பிரமணி வீட்டின் கீழ் நடை பாதையில் வசித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் சுமித்ராவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவருடைய தம்பி ஜபரீஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அதன் பிறகு இருவரும் வீடு திரும்பி இருக்கின்றனர். அப்போது குடி போதையில் இருந்த பாலசுப்பிரமணி அவரது மகன் ஜபரீஷிடம் சகோதரி சுமித்ராவை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் கொண்ட ஜெபரீஷ் அவரது தந்தையை திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பிறகு வாக்குவாதம் அதிகரித்ததில் திடீரென்று கீழே கிடந்த கிரிக்கெட் மட்டையை எடுத்தும் மற்றும் செங்கல்லை எடுத்தும் தந்தை பாலசுப்பிரமணியத்தின் தலையில் தாக்கி இருக்கிறார். இதில் பாலசுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அவரது தந்தையை கொலை செய்து விட்டதாக கிண்டி காவல்துறை நடக்க அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜபரிசை கைது செய்தனர். அதன் பிறகு உயிரிழந்த கடந்த பாலசுப்பிரமணியின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதோடு இந்த கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

படுமோசமாக காட்சியளிக்கும் சாலை பொதுமக்கள் அவதி…..! கண்டுகொள்ளுமா மாநில அரசு…..?

Sat Jul 15 , 2023
புதுவை மாநிலம் முதலியார் பேட்டை தொகுதி சுதான்னா நகர் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆகவே இருசக்கர வாகனங்களில் செல்போன் மேடு பள்ளமான சாலையில் நிலை தடுமாறி விழுந்து அடிக்கடி காயம் அடைகிறார்கள். மழை காலங்களில் நீர் பள்ளத்தில் தேங்கி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள். அதிலும் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த […]

You May Like