ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாத வருமானத்தை மத்திய, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என நடிகர் சோனு சூட் வலியுறுத்தியுள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னைநோக்கி வந்த கோரமண்டல் ரயில் உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில் 280க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நபர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதேபோல விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விபத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பிரபல நடிகர் சோனு சூட் ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாத ஊதியத்தை மத்திய, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டு தனது கோரிக்கையை முன் வைத்துள்ளார்.