இந்தியா, நியூசிலாந்து இடையே சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிக்கு பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகிவந்தவண்னம் உள்ளது.
நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியைச் சுற்றி ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் , ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்ன காத்திருக்கக்கூடும் என்பதை சில தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூட ரோஹித் கலந்து கொள்ளவில்லை, அதற்கு பதிலாக துணை கேப்டன் ஷுப்மான் கில்லை அனுப்ப முடிவு செய்தார்.
இந்த நடவடிக்கை வதந்திகளை மேலும் தீவிரப்படுத்தியது, இருப்பினும் இதுபோன்ற எந்த விவாதமும் இன்னும் நடக்கவில்லை என்பதை கில் உறுதிப்படுத்தினார். ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து பேசப்பட்டு வரும் செய்திகளுக்கான விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணியின் துணை கேப்டனான சுப்மன் கில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், தற்போது வரை நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவது குறித்தும், சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றுவது குறித்து மட்டுமே பேசி வருகிறோம்.
ரோகித் சர்மா இதுவரை என்னிடமோ அல்லது அணியின் நிர்வாகத்திடமோ, வீரர்களிடமோ அவரது ஓய்வு குறித்து எதுவும் பேசவில்லை. ரோகித் சர்மாவுக்கு அப்படி ஒரு நினைப்பே இல்லை என்று நான் நினைக்கிறேன் என சுப்மன் கில் கூறியுள்ளார். இதன் காரணமாக ரோகித் சர்மா தற்போதைக்கு ஓய்வை அறிவிக்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. ஒருவேளை அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் நிச்சயம் இன்னும் சில காலம் சாதாரண வீரராக தொடர விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் ஷர்மா..?