எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி வரை சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி மற்றும் வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சனிக்கிழமைகளான ஜூலை 8,15, 22, 29, ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
ஞாயிற்றுக்கிழமைகளான ஜூலை 9, 16, 23, 30, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.