fbpx

அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா…! விண்வெளித் துறைக்கு ரூ. 1,000 கோடி… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

இன்-ஸ்பேஸ் திட்டத்தின் கீழ் விண்வெளித் துறைக்கு ரூ. 1,000 கோடி தனியார் கூட்டு மூலதனத்தை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் கீழ் விண்வெளித் துறைக்கு ரூ. 1,000 கோடி தனியார் கூட்டு மூலதனத்தை நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 1,000 கோடி உத்தேச தனியார் கூட்டு மூலதனத்திற்கான இந்த நிதியத்தின் செயல்பாட்டுக் கால அளவு செயல்பாடு தொடங்கிய தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் ஆகும். முதலீட்டு வாய்ப்புகளையும் நிதித் தேவையையும் பொறுத்து நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ. 150 முதல் 250 கோடி வரை இருக்கும்.

2025-26 ரூ. 150 கோடி, 2026-27 ரூ. 250 கோடி, 2027-28 ரூ. 250 கோடி, 2028-29 ரூ. 250 கோடி, 2029-30 ரூ. 100 கோடி ஆகும். நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை, தேசிய விண்வெளித்திறன்கள் மீதான அதன் ஆற்றல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உத்தேச முதலீடு ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 60 கோடி வரை இருக்கும். முதலீட்டு சமபங்கு விகிதம் வளர்ச்சி நிலையில் ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 30 கோடி வரை, பிந்தைய வளர்ச்சி நிலையில் ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 30 கோடி வரை என இருக்கும்.

இந்த நிதி இந்தியாவின் விண்வெளித் துறையை முன்னேற்றுவதற்கும், தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து, பின்வரும் முக்கிய முயற்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேபடுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

English Summary

Space Department Rs. 1,000 crore… Union Cabinet approval

Vignesh

Next Post

வற்றாத சுனை.. தென் மாவட்டத்தில் கம்பீரம் காட்டும் பாண்டியர் கால அதிசய குடை வரை கோயில்..!!

Fri Oct 25 , 2024
விருதுநகர் மாவட்டத்தில் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான பாண்டியர் கால சிவாலயம் ஒன்று உள்ளது. விருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ளது மூவரை வென்றான் எனும் அழகிய கிராமம். இக்கிராமம் மிக நீண்ட வரலாற்று பின்னணி கொண்டது. இவ்வூரில் இருக்கும் மலையில் தான் இந்த பழமையான சிவன் கோவில் உள்ளது. குடைவரை கோவில் என்பது கட்டுமானங்கள் ஏதுமின்றி மலையை குடைந்து கட்டப்படுவதாகும். விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலும் கற்றளி கோவில்களே காணப்படும். இந்நிலையில் மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள […]

You May Like