fbpx

செவ்வாய் கிரகத்தில் நகரம்.. இன்னும் 20 ஆண்டுகள் தான்..!! – அடித்து சொல்லும் எலான் மஸ்க்..

செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பதை ஆய்வு செய்வதற்கு எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில், எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வரும் 2026ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும். செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குவதற்கான நம்பகத்தன்மையை சோதிக்க, முதலில் வீரர்கள் யாரும் இல்லாத விண்கலம் செலுத்தப்படும். ஏழு ஆண்டுகளுக்குள் முதல் நபர் செவ்வாய் கிரகத்தில் கால் பதிப்பார்.

செவ்வாய் கிரகத்தில் 20 ஆண்டுகளில் அங்கு ஒரு நகரம் அமைக்கப்படலாம். 20 ஆண்டுகளில் தன்னிறைவு நகரத்தை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். வீரர்கள் யாரும் இல்லாத ( uncrewed starship) விண்கலம் ஐந்து ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முதல் முறையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை உருவாக்கியது. இது பொருளாதார ரீதியாகவும் சாத்தியமானதாக மாறியது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், மக்களையும், பொருட்களையும் அனுப்பும் திறன் கொண்ட ஒரு பெரிய, பல்நோக்கு அடுத்த தலைமுறை விண்கலத்தை உற்பத்தி செய்யும் தனது இலக்கை நிறைவேற்ற ஸ்டார்ஷிப்பை எலான் மஸ்க் நம்புகிறார் என்கின்றனர்.

Read more ; #Breaking: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியது காவல்துறை…!

English Summary

SpaceX, owned by Elon Musk, is interested in exploring what’s on Mars.

Next Post

கல்வி தான் நம்மை உயர்த்தும்.. உங்கள் மேல் படிப்புக்கு நான் துணை நிற்பேன்..!! - திமுக பகுதி செயலாளர் உறுதி

Sun Sep 8 , 2024
tiruvottiyurDMK West Region DMK Secretary YM Aruldasan has assured that he will help the students in his area

You May Like