fbpx

“ அரசியல்வாதியை போல பேசுகிறார்..” தமிழக ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் தனித்தீர்மானம்..

தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.. 144 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.. 2 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர்.. இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ ஆளுநர் அரசியல் சட்டத்தை கடந்து, அரசியல் கட்சியின் கண்ணோட்டத்தில் செயல்படுவதால் இப்படி ஒரு தீர்மானத்தை 2வது முறையாக முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஆளுநர் ஏற்படுத்தி உள்ளார்..

ஆட்டுக்கு தாடியும், நாட்டிற்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை என்று அண்ணா கூறிய போதிலும், ஆளுநர் பதவியில் இருக்கும் வரையில் அதற்குரிய மரியாதையை கொடுக்க அண்ணா, கலைஞர் தவறியதில்லை.. அதில் இருந்து நானும் இம்மியளவு கூட விலகியதில்லை.. ஆளுநர் பதவிக்கு மரியாதை இந்த அரசும் தவறியதில்லை..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த மாநிலத்தில் உள்ள மக்களுக்கு வழிகாட்டும் நண்பராக இருக்க வேண்டும் என்று பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் நம் ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருக்க விரும்பவில்லை என்பதை அவரின் செயல்கள் காட்டுகின்றன..

ஆளுநர் திறந்த மனதுடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல.. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக மசோதாக்களை கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசுகிறார்.. அவர் ஒரு அரசியல் கட்சி தலைவர் போல பேசி வருகிறார்.. ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை செய்யும் மசோதாவை இந்த அவையில் மீண்டும் நிறைவேற்றிய அனுப்பிய பிறகும் ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார்.. ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதமானால், அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள் என்று விதண்டவாதமாக பேசுகிறார்..

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார்.. தமிழ்நாட்டு சட்டமன்றத்தை அவமதிக்கிறார்.. வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகோலாக ஆளுநர் பேசுகிறார். ராஜ்பவனை அரசியல் பவனாக ஆளுநர் மாற்றிவிட்டார்.. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே விதி.. ஆளுநரின் செயல்களை கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்..

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க ஜனாதிபதி, மத்திய அரசு குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வேண்டும்.. தமிழக ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசு தலைவரை வலியுறுத்துகிறோம்.. ” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

மதுரை அருகே மனைவிக்கு தவறான புகைப்படங்களை அனுப்பியதாக கணவர் மீது புகார்….! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!

Mon Apr 10 , 2023
மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (27) இவருடைய கணவர் ராஜ்குமார் (27) இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது மனைவியை ராஜ்குமார் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தன்னுடைய பெற்றோர்கள் வீட்டுக்கு போய்விட்டார். ஆகவே தன்னுடைய நண்பரின் பெயரில் போலிய முகநூல் பக்கம் ஒன்றை ஏற்படுத்தி அந்த பக்கத்தின் மூலமாக மனைவி […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like