வார விடுமுறை நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் இருந்து பயணிப்பார்கள். அதேபோல பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணிப்பார்கள்.
இதனை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 21 ஆந் தேதி (இன்று) வெள்ளிக்கிழமை 270 பேருந்துகளும், 22 ஆம் தேதி (நாளை) 275 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 22 ஆம் தேதி (சனிக்கிழமை) தலா 51 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், மாதாவரத்தில் இருந்து 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் தலா 20 பேருந்துகள் என சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more : பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20%-க்கு மேல் அதிகரிக்க மத்திய அரசு முடிவு…!