மத்திய சட்டத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு குரங்குகள் ஸ்மார்ட்போனை ஆப்பரேட் செய்யும் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்க்கும் போது டிஜிட்டல் மயம் எந்த அளவிற்கு இந்த உலகத்தில் முன்னேறி உள்ளது என்பதை காட்டுவதாக ட்விட்டரில் தனது கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் கிரண் ரிஜிஜு.
குரங்குகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருக்கும் நிலையில், ஓரிடத்தில் மூன்று குரங்குகள் ஒன்றாக அமர்ந்திருக்கிறது.
அப்போது அருகில் செல்லும் நபரானவர் தனது ஸ்மார்ட்போனை அந்த குரங்குகளிடம் காண்பிக்கிறார். அதில் செல்போனை பார்க்கும் ஒரு குரங்கு மொபைலின் ஸ்கீரினை SWIPE செய்யும் காட்சி வியக்க வைக்கிறது.
அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிவேற்றம் செய்த வீடியோவை 32 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் பல்வேறு கருத்துகளை பெற்று இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.