fbpx

இலங்கை கடற்படை தொடர் அடாவடி!. ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது!.

Fishermens: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து விடுவர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையிலும் அடைக்கப்படுவர். இது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.

கடந்த மாதத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் மொட்டை அடித்து திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளின் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

Readmore: Cyclone…! டானா புயல் எப்பொழுது கரையை கடக்கும்…? வானிலை மையம் அப்டேட்…!

English Summary

Sri Lankan Navy Serial Adavadi!. 16 Rameswaram fishermen arrested!

Kokila

Next Post

வள்ளியை முருகன் காதலித்து கரம் பிடித்த இடம்.. வள்ளிமலை முருகன் கோயிலின் வரலாறும் பின்னணியும்..!!

Thu Oct 24 , 2024
The place where Murugan fell in love with Valli and held his hand.. History and Background of Vallimalai Murugan Temple..!!

You May Like